ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவியொன்றில் மாற்றம் செய்யப்படவுள்ள தோடு, மூன்றாம் நிலை இளம் தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் (ஏப்ரல்) சீனாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு 2005 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது வழங்கப்பட்ட பிரதான பதவிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை வகித்து அரசின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.