அதிகாரிகளின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ள அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் பலவற்றின் நடவடிக்கைகளை தனது நேரடி அவதானத்தின் கீழ் கொண்டுவர பிரதமர் அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளார்.
இவ்வருடத்தின் முதலாம் தவணை முடிவடையவுள்ள நிலையில் அரச நிறுவனங்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கி பயணித்துள்ளதா என்பதை இதன்போது பிரதமர் அவதானிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கு முன்னர் பிரதமர் கல்வி அமைச்சையும், வெளிவிவகார அமைச்சையும் தனது கண்காணிப்புக்கு உட்படுத்தியதன் பின்னர், வெளிவிவகார அமைச்சில் காணப்பட்ட அதிகாரிகளின் செல்வாக்குக்குட்பட்டிருந்த முக்கிய பல விவகாரங்களை படிமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டுவந்திருந்திருந்தார் எனவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.