திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அந்தத் திருமணத்தின் போது, எப்போதும் போல இருப்பது நன்றாக இருக்குமா என்ன? திருமணத்திற்கென்று அலங்கரித்துக் கொள்வது ஒன்றும் புதியதல்லவே!
அதிலும், மணப் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிகமாகவே ஆசைப்படுவார்கள். இது இயல்புதான். அதே நேரத்தில், சில பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே வயிறு தொப்பை போட்டிருக்கும்.
எவ்வளவோ உடற்பயிற்சி செய்தாலும், டயட்டில் இருந்தாலும் தொப்பை மட்டும் குறையவே குறையாது. எந்த உடை போட்டுக் கொண்டாலும் அவர்களுடைய தொப்பை மட்டும் எப்படியாவது வெளியே தெரிந்து விடும்.
திருமணத்தன்றும் இதேபோல் தொப்பையைக் காட்டிக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? அதற்குத் தான் அருமையான ஐந்து யோசனைகளை இங்கே முன் வைக்கிறோம்.
தொப்பையைச் சுற்றிலும், அடுத்தவர்களின் கண்களைக் கவரும் வண்ணம் பலவிதமான வேலைப்பாடுகள் அடங்கிய அலங்காரங்களைச் செய்து கொள்ளலாம். ஆங்காங்கே சிறுசிறு குஞ்சரங்களைத் தொங்க விடலாம்; பாசி மணிகளைக் கோர்த்து விடலாம்; முக்கியமாக, கொஞ்சம் இறுக்கமான ஒட்டியாணம் அணிந்து கொள்ளலாம்.
திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் பார்வை முழுவதும் இந்த அலங்காரங்களில் இருக்கும் போது, தொப்பை..? உங்கள் ஆடைகளின் வெளிப்புறத்தின் அலங்காரங்களையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
முகத்தில் பளிச்சென்ற மேக்கப், கழுத்தில் ஜொலிக்கும் நகைகள், அசத்தலான ஹேர் ஸ்டைல், மங்களகரமான உடைகள் என்று பளபளக்கும் இந்த விஷயங்களில் உங்கள் தொப்பையை யாரும் கவனிக்கப் போவதில்லை.
திருமணத்திலும் சரி, மாலை வரவேற்பு நிகழ்ச்சியிலும் சரி... கண்ட கண்ட உடைகளை அணிவதற்குப் பதிலாக, அன்று முழுவதும் ஒரு சராசரி இந்தியப் பெண் போல் புடவை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியது போல், புடவை மூலம் தொப்பையை மறைக்கும் வேலையை அன்று முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
மிகவும் டைட்டாக மற்றும் பட்டையாக இருக்கக் கூடிய எலாஸ்ட்டிக் டிசைன் கொண்ட உள்ளாடையை அன்று ஒரு நாள் மட்டும் அணிந்து கொள்ளுங்கள். திக்கான அந்த எலாஸ்ட்டிக், உங்கள் தொப்பை மற்றும் இடுப்பை சமமாகக் காட்டும். எலாஸ்ட்டிக்கின் இறுக்கத்தினால், தொப்பையும் ஓரளவு உள்ளே அமுங்கும். தேவைப்பட்டால் பெல்லி-பாண்டுகளையும் போட்டுக் கொண்டு தொப்பையை இறுக்கிக் கொள்ளலாம்.
தொப்பையை மறைக்கும் தந்திரத்தை அன்று நீங்கள் அணிந்து கொள்ளவுள்ள முகூர்த்த சேலை மூலமாகவும் செய்து கொள்ளலாம். உங்கள் புடவையின் பல்லு என்று அழைக்கப்படும் பகுதியைக் கொண்டு உங்கள் தொப்பையைக் கச்சிதமாக மறைத்து விடலாம்.
அடிப்பக்கம் அகண்டு இருக்கும் லெஹெங்கா துப்பட்டா மூலமும் இதைக் கொஞ்சம் சரிசெய்ய முடியும். மேலும், புடவையில் இடுப்பைச் சுற்றிலும் எம்பிராய்டரி அதிகம் இல்லாத அளவுக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். தொப்பையை முழுவதும் மறைக்கும் அளவுக்குக் கொஞ்சம் நீளமான ஜாக்கெட் அணிந்தாலும் ஓ.கே.தான்!
ஆண்களின் உடை அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டியவைகள்..!
தொப்பையை தெளிவாக காட்டும் இறுக்கமான உடைகளை தவிர்க்கவும். உங்களுடைய வயிற்றின் தசைகளுக்கு இடம் தரும் வகையிலான கேசுவல் சட்டைகளை அணிந்தால் தொப்பையின் தசைகள் பெருமளவு மறைந்திருக்கவும், அதன் உண்மையான பரிமாணம் வெளியே தெரியாமலும் இருக்கும். ஏற்கனவே உங்கள் வயிறு வித்தியாசமாக இருக்கும் நேரத்தில், அதற்கு சற்றும் ஏற்காத வகையிலான உடைகளை அணிவது மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயமாகும். இவையிரண்டும் இணைந்து உங்களைக் காணும் போது இரட்டை கொடுமை போன்று தான் இருக்கும்.
டார்க் கலர்களை தேர்ந்தெடுங்கள்,
அடர்ந்த(Dark) வண்ணங்களை கொண்ட உடைகள் உங்களை சற்றே ஒல்லியாக இருப்பதைப் போலவும் மற்றும் தொப்பையின் உண்மையான பரிமாணத்தை மறைத்து காட்டவும் உதவி செய்யும். இந்த வகையிலான ஆடைகள் ஒரு கவசம் போல் செயல்பட்டு, உங்களை ஷார்ப் ஆக காட்டுகின்றன. நேவி ப்ளூ, கருப்பு, பழுப்பு போன்ற வண்ணங்களை பயன்படுத்தி அழகாக தோற்றமளிக்கலாம்.
ஏற்கனவே உங்களுடைய வயிறு பெருத்து, தொப்பை அசிங்கமாய் தெரிந்து கொண்டிருக்கும் வேளைகளில், நீங்கள் அணியும் உடைகளும் அதைப் போலவே பளபளவென்று இருந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காதவாறு அணிய வேண்டும். எனவே, எளிமையான மேட்சிங்கும், குறைவான பளபளப்பும் உடைய வண்ணங்களை கொண்ட உடைகளை அணிந்து, மற்றவர்களின் கவனத்தை அதிகளவு ஈர்க்காமல் இருக்க முடியும்.