உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்...!

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் சுயலாபங்களுக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும் பல தடைவைகள் உடனடியாக, உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு இரண்டு கால்களாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்கவில்லை. ஆகவே இன்று தலைகீழாக பிரதேச சபையின் முன்னால் நின்று தெரிவிக்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர் தெரிவித்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எலப்பிரிய நந்தராஜ் மற்றும் டக்ளஸ் தர்மகீர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -