பாடசாலைகளை முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் உங்கள் பிள்ளைகளை அப்பாடசாலைகளில் சேர்த்து வையுங்கள்






ந.குகதர்சன்-

ங்களது பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் உங்கள் பிள்ளைகளை அப்பாடசாலைகளில் சேர்த்து வையுங்கள். ஆசிரியர்களின் தரம் நகரத்துக்கு வேறு, கிராமத்துக்கு வேறல்ல என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளவும் வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் கே.லவகுமார், கிராம சேவையாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாடசாலைகளில் கல்வியுடன் மாத்திரம் நின்றுவிடாமல் மாணவர்களின் உடற்கட்டுக்களையும் திறம்பட வைத்திருக்க வேண்டும் எதிர்காலத்தில் கல்வியை மட்டும் புகட்டிய கல்விமான்களாக மாத்திரமல்லாமல், ஆளுமை மிக்கவர்களாக அதிகாரம் செலுத்தக் கூடியவர்களாக மாற்றுவதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பாடசாலை மட்டத்தில் திறமைகளை நிரூபிப்பவர்கள், கோட்ட மட்டம் மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியும். அனைத்துப் பாடசாலைகளிலும் நடைபெறவேண்டும் என்ற விளையாட்டுப் போட்டிகள். சில பாடசாலைகளில் இந்த பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படாமலிருக்கிறது.

உண்மையிலேயே 132 மாணவர்களைக் கொண்ட இந்தப்டிபாடசாலையில் 3 இல்லங்களாக பிரித்து வியக்கத்தக்க விளையாட்டுப் போட்டியை நடத்தியிருக்கிறீர்கள். முக்கியமாக சிறப்பான உடற்பயிற்சிக் கண்காட்சியை பாராட்டியாக வேண்டும்.

நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், கணணிக் கூடம், ஒன்று கூடல் மண்டபம் என சகல வளங்களையும் கொண்ட இந்தப் பாடசாலையில் மாணவர்கள் சேர்க்கப்படுவது மிகவும் குறைவாக இருப்பது உண்மையில் மனவருத்தத் தக்க விடயம்.

மட்டக்களப்பில் மாநகர சபைக்குள், நகரத்தை அண்டிய பகுதியில் இருக்கும் பாடசாலைக்கு மாணவர்கள் 50 பேரைத் தந்தால் போதும் என்று அதிபர் கேட்பது மிகவும் வருந்தத்தக்குரியதாகும்.

இவ்வாறான பாடசாலைகள் அபதிர் கூறிய போன்று எதிர்காலத்தில் மூடப்படும் நிலைக்கு சென்றுவிடலாம் ஏனென்றால் நகரத்தில் இருக்கும் பாடசாலைகளை நோக்கிய நமது குழந்தைகளை அழைத்துச் செல்வது வழக்கமாகி விட்டது. நகரத்திலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, நகரத்தையொட்டிய ஏனைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களாக இரந்தாலும் சரி, ஒரே மட்டத்தில் பயிற்றப்பட்ட அல்லது பட்டதாரி ஆசிரியர்களாகவே இருக்கின்றனார்கள். ஆசிரியர்களில் எந்தக் குறையுமில்லை. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்களது பகுதிகளில் இருக்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்விக்காயினும் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது.

ஒரு ஊரிலிலே இரண்டு கண்கள் போல ஆலயமும், வித்தியாலயமும் முக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். எமது போராட்ட காலத்தில் நாங்கள் போராடிய காலம் எமது பிரதேசத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைத்தார்கள் உறுதுணையாக இருந்தார்கள். எல்லோரும் சொல்வார்கள் நீங்கள் போராட வேண்டும், ஈழம் கிடைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அந்தப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் போராட்டத்துக்குச் செல்வதை விரும்ப மாட்டார்கள். இது ஒரு வழமையாக இருந்தது. என்னுடைய பிள்ளை மட்டும் பத்திரமாக இருக்க வேண்டும் யாராவது போராட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் அப்படி நினைப்பதில்லை.

அதே போன்று இந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பதாக அதிபர் கூறினார். அந்த ஆர்வத்தை பிள்ளைகளை இந்தப் பாடசாலையில் சேர்ப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

எங்கள் மாவட்டத்தில் 5ஆம் ஆண்டு பரீட்சைக்குப் பெயர் போன பாடசாலை கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம். அதே போன்று வின்சன்ற், மக்கேல் கல்லூரி, சிசிலியா என அனைத்து பாடசாலைகளிலும் ஒரு வகுப்பில் 4 பிரிவுகளுக்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு வகுப்பில் இருக்கும் மாணவர்களை விடவும் குறைந்தளவு மாணவர்களே இந்தப் பாடசாலையில் 11 வகுப்புகளில் கல்வி கற்கிறார்கள்.

ஆனால் மாணவர்கள் பிரதேச மக்கள், பெற்றோர்கள், இது மாரியான பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பாடசாலைச் சமூகம் அதிபரும் ஆசிரியர்களும் கொஞ்சம் கடினமாக வேலை செய்ய வேண்டும். அதிபர் ஆசிரியர்கள் 2 வருடங்களுக்குள் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டுங்கள் அப்போது இந்தப் பிரதேசத்தின் மக்கள் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு முன்வருவார்கள்.

நாங்கள் எங்களது மக்களை அடிமட்டத்திலிருந்து கல்வியின் மூலம் உயர்த்துவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தாலும் சரி எங்களது நிதி ஒதுக்கீடுகள் கூடுதலாக பாடசாலைகளுக்கு கல்வியில் மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஒதுக்கப்படுகின்றது.

அப்பார்ந்த மாணவர்களே, உங்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள், எவ்வளவுக்கு விரும்புகிறார்களோ, கற்பிக்கிறார்களோ, அவற்றுக்கப்பால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறவேண்டும் க.பொ.த சாதார தரம், உயர்தரம் சித்தியடைய வேண்டும், பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற திடசங்கற்பம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -