அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தைக் காணவில்லை - தோண்டி எடுத்தது யார்...?

தவாச்சி பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் மீண்டும் இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 28ம் திகதி குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்ட மயானத்திலுள்ள கல்லறையில் இருந்து இரகசியமாக ஒருவரால் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் சிறுமியின் தந்தை மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து மயானத்துக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரைத் தேடி மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -