இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து மரணம்..!





தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த அஞ்சலிங்கம் தர்மதேவா (வயது 60) என்ற ஒய்வுபெற்ற பேருந்து நடத்துநரே இவ்வாறு வெப்பப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.

கடந்த 15ஆம் திகதி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவரைப் பார்க்க வந்த இவர், உறவினர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்துக்கு, அன்று மதியம் வந்துள்ளார்.

வெயில் கொடுமை தாங்கிக் கொள்ளமுடியாமல், வீதியின் அருகில் உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்று களைப்பாறியுள்ளார். எனினும் அவர், கடையின் முன் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்படி முதியவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினார்.

வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -