கலை இலக்கிய எழுத்துத் துறைக்கு களம் அமைத்த மூத்த எழுத்தாளர் புன்னியமீனின் மறைவு இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்

பி.எம்.எம்.எ.காதர்-

ருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கம் அனுதாபம்

தூர நோக்குடன் கலை இலக்கிய எழுத்துத் துறைக்கு களம் அமைத்துச் செயற்பட்ட இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் ஊடகவியலாளருமான பி.எம்.புன்னியமீனின் மறைவு இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும் என மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.

மூத்த எழுத்தாளர் பி.எம்.புன்னியமீன் காலமானதையொட்டி மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது :- மூத்த எழுத்தாளர் பி.எம்.புன்னியமீன் காலமான செய்தியறிந்து மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கம் பெரும் கவலையடைந்துள்ளது.துயருற்றிருக்கும் அவரது மனைவி மற்றும் பிள்ளளைகளுக்கும் எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

இதுவரை தமிழ் மொழியில் சுமார் 170 புத்தகங்களுக்கு மேல் இவர் எழுதி வெளியீட்டுள்ளார் சிறந்த சிறுகதை ஆசிரியரான இவர் 150துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளதோடு பெரும் தொகையான பல்துறைசார்ந்த கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஆசிரியராகவும்,அதிபராகவும் பணிபுரிந்ததுடன் மத்திய மாகாண கலை, கலாசார அமைச்சின் உதவிப்பணிப்பாளராகவும் கடமையாற்றிக் கொண்டே முழுநேர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் இன்று(10-03-2016) காலமானார் இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைக்க மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கம்; எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திற்கின்றது.என அந்த அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -