தற்கொலைக் குண்டு அங்கி: மைத்திரியை கொலை செய்ய முயற்சி

இணைப்பு 5

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 3ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

யாழ்.நகரில் உள்ள இரண்டு விடுதிகளையும், வவுனியாவில் வீ்டமைப்புத் தொகுதியையும் அவர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சாவகச்சேரிப் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணப் பயணத்தை ரத்துச் செய்யுமாறு படைத்தரப்பினால், சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க யாழ்ப்பாணம் சென்றிருந்த, அதிபர் பாதுகாப்புப் பிரிவினர், திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -