என்னிடம் அனுமதி பெறாமல், பிக்குகளை கைதுசெய்ய வேண்டாம் - ஜனாதிபதி

ன்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்புகள் காரணமாகவே ஜனாதிபதி பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உடுவே தம்மாலோக்க தேரர், சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தனது விகாரையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் நேற்று 60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -