மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பொறியியலாளர் சிப்லி பாரூக் விஜயம்..!

அஹமட் இர்சாத் -
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை புதன்கிழமையன்று (09.03.2016) மேற்கொண்டு வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் அப்துல் ஜப்பார், ஏனைய வைத்தியர்கள் மற்றும் அங்கு கடமை புரியும் ஊழியர்களையும் சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள், குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையினை பார்வையிட்டார். 

இவ்விஜயத்தின்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ் வைத்தியசாலையானது இலங்கையில் உள்ள சிறந்த 5 ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்குள் ஒன்றாக திகழ்கின்றது அதுமட்டுமன்றி இவ்வைத்தியசாலையானது 35கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு திறம்பட இபிரதேசத்திற்கு சேவைகளை வழங்கிகொண்டிருக்கின்றது. 

மேலும் இந்த வைத்தியசாலையானது இப்பிரதேசத்திற்கு கிடைத்த ஓர் வரபிரசாதமாகும். அவ்வாறு இருந்த போதிலும் இவ் வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடனும், கவனிக்கப்படாமல் இருப்பதனை காணும்பொழுது மிகவும் கவலையளிக்கிறது, ஏனெனில் இங்கு அமையபெற்றுள்ள நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியானது 2015 முதல் எவ்வித செயற்பாடுகளுமின்றி மூடப்பட்டுள்ளது, அதுமட்டுமன்றி பல அடிப்படை வாசதிகளின்றியும் காணப்படுகின்றது. 

எனவே வைத்தியசாலையின் நிலைமைகளை உடனடியாக கௌரவ சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு அறிவித்ததனை தொடர்ந்து இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார பிரதியமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -