மக்களது தற்போதைய தேவைகளை முதலில் வெளிப்படுத்த வேண்டும் - வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின்

யாழ்ப்பாணம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஜே84.85,86 ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளுக்கான “மக்கள் சந்திப்பு” கடந்த 11-03-2016 அன்று மன்ப உல் உலூம் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது, அங்கு கலந்துகொண்டிருந்த கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், மற்றும் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மத்தியில் கருத்துவெளியிட்ட போதே அவர் மேற்கண்டவராறு தெரிவித்தார், அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

நாம் மீளக்குடியேறும் மக்களாக இருக்கின்றோம், காணி, வீடமைப்பு, தொழில்வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் என எமக்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன, முதலில் கிராம மட்டத்தில் எமது தேவைகளை நாம் இனம்காணுதல் வேண்டும், அதன் பிரகாரம் முதன்மை அடிப்படையில் தீர்கப்படவேண்டிய தேவைகளை நாம் இனம் காணமுடியும்.

வடக்கு மாகாணசபையின் பிரமான அடிப்படையிலான நிதி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி, மாகாண உதவித்திட்டங்கள், மத்திய அரசின் உதவித்திட்டங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித்திட்டங்கள் என பலவிதமான உதவித்திட்டங்கள் காணப்பட்டாலும் எமது தேவைகளை நாம் ஒழுங்காகத் தீர்மானிக்காவிட்டால் அவற்றை கோரிக்கைகளாக முன்வைக்க முடியாது. அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது. 

எனவே கிராமிய மட்டத்தில் செயற்படுகின்ற கிராமிய அபிவிருத்திச் சஙங்கள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்

நாங்கள் உங்களுக்கு மிகவும் சமீபமாகவே இருக்கின்றோம். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவ்வாறான மக்களுக்கு நெருக்கமான அரசியலையே இந்த நாட்டிலே முன்னெடுகின்றது; இந்த வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயனபடுத்த வேண்டும், எங்களிடம் உங்களது தேவைகளை முறையாக முன்வைத்தால் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் எம்மால் அவற்றை முன்னிறுத்துப் பேசமுடியும் என்றும் தெரிவித்தார்

மேற்படி நிகழ்வில் மக்களின் தேவைகளைக் கண்டறிவதற்கான விண்ணப்படிவங்களும் விநியோகிக்கப்பட்டன, மேற்படி நிகழ்வை கிராம அலுவலகர் திரு.சேந்தன் அவர்கள் வழிநடாத்தினார்.

என்.எம்.அப்துல்லாஹ்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -