சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வரட்சியின் பின் அமுலுக்கு வந்த மின் வெட்டு மற்றும் நேர மாற்றம் போன்று நாட்டில் தற்போது அதிகரித்திருக்கும் மின் தேவையைக் கருத்திற்கொண்டு நேர மாற்றத்தை அறிமுகம் செய்வது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கோடை மற்றும் குளிர் காலங்களில் இயற்கை ஒளியின் பயனைப் பெறுவதற்கேற்ப வருடத்தில் இரு முறை நேரமாற்றம் இடம்பெறுவது வழக்கமாகும். சந்திரிக்கா அரசின் போதும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபபோதைய மின்சாரத் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே காலை வேளையில் அதிகமாக குளிரூட்டிகள், காற்றாடிகள் பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில் நேரமாற்றம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.