முஸ்லிம் சமூகம் இன்று அதிருப்தியடைந்த நிலையில் உள்ளது - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ் -
முஸ்லிம் சமூகத்தின்பறிபோன காணிகளை நல்லாட்சி அரசாங்கம் விடுவித்து வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாததால் முஸ்லிம் சமூகம் இன்று அதிருப்தியடைந்த நிலையில் உள்ளது. கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

நமதுநாட்டில் நல்லாட்சிஏற்படுவதற்கு முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்புசெய்தன. 

நல்லாட்சிஅரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தின் பறிபோனகாணிகள் விடுவிக்கப்பட்டுவழங்கப்படும் என முஸ்லிம் சமூகம் பெரும் எதிப்ர்பார்ப்புடன் இருந்தன. இதுவரையும் முஸ்லிம்களின் காணிகளைவிடுவிக்கும் விடயம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் முஸ்லிம் சமூகம் அதிருப்திஅடைந்தநிலையில் உள்ளதுஎனகிழக்குமாகாண சபை உறுப்பினர். ஆர்.எம். அன்வரினால் புல்மோட்டைபிரதேசத்தில் பொதுமக்களின் காணிகளைபடையினரிடமிருந்து விடுவிக்கக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வீதிஅபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார். 

தவிசாளர் திரு. சந்திரதாசகலபதிதலைமையில் நேற்றுகிழக்குமாகாண சபை அமர்வுநடைபெற்றபோதுதொடர்ந்துஉரையாற்றுகையில், நமது நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு பங்களிப்புசெய்த தமிழ் சமூகம் விழிப்புடன் செயல்பட்டு தங்களின் அரசியல் பேரம் பேசும் நிலைமையைப யன்படுத்தி தமது சமூகம் இழந்தவைகளைப் பெற்றுவருகின்றது. 

இதுகுறித்து முஸ்லிம் சமூகம் மகிழ்ச்சியடைகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரியமான காணிகளை மீட்டுவருகின்றனர். 

இந்தவிடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அர்பணிப்போடு செயல்பட்டுவருவதை நாம் பாராட்டுகின்றோம். 

கிழக்குமாகாண கல்வி அமைச்சராக பதவிவகித்த முன்னாள் கல்வி அமைச்சர் திரு விமலவீரதிஸாநாயக்க நமது கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு பணிபுரிந்தார். 

பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த திரு. விமலவீரதிஸாநாயக்க இன பேதமின்றி செய்ல்பட்டடார். 

நீண்ட காலமாக புல்மோட்டை பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான காணிகளை சிலர் அத்துமீறி பெறுவதற்கு பலமுயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து புல்மோட்டை பிரதேச மக்கள் பெரும் ஆரப்பாட்டங்களையும் நடாத்தியுள்ளனர். \

பாதுகாப்புபடையினருக்கு தேவையான காணிகளை நாம் வழங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு நலன் கருதித்தான் பாதுகாப்புப் படையினர் உள்ளனர். 

புல்மோட்டை பாதுகாப்புப் படையினருக்கு சுமார் 180 ஏக்கர் காணியுள்ளதாக இச்சபையில் சுட்டிக் காட்டப்பட்டது. 

பாதுகாப்புபடையினருக்கு அவசியமாக தேவைப்படும் காணிகளை வழங்கிவிட்டு மிகுதி காணிகளை இப்பிரதேச முஸ்லிம், தமிழ், சிங்கள அரசாங்க உத்தியோகத்ததர்களுக்கு வீடமைப்புத் திட்டம் அமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை கிழக்குமாகாணசபையும், மாகாண காணி அமைச்சரும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கிழக்கு மாகாண காணி அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் பதவியில் இருந்தபோது கிழக்குமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இச்சபையில் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட உணர்வுகளை கேட்டுள்ளார். தனக்கு அரசாங்க காணி 'ஒருஅங்குலம்' கூட வழங்கப்படவில்லை என இச்சபையில் அன்று கவலையோடு தெரிவித்தார். 

இப்போது கிழக்குமாகாண காணி அமைச்சர் பதவி திருமதி ஆரியவதி கலபதிக்கு கிடைத்துள்ளது. இச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணவேண்டும். 

குறிப்பாக திருகோணமலை மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும்.

இதேபோன்று அம்பாரைமாவட்டத்தில் பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த 520 ஏக்கர் விவசாயக் காணி விடுவிப்பு தொடர்பான அம்பாரைமாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் காணிகளை விடுவிப்பதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் இது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. 

அரசஅதிபர்களினாலும், காணி அதிகாரிகளினாலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டும் முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான இக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த விடயத்தில் மாகாண காணி அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

கிழக்குமாகாண சபையின் ஆட்சிக்காலம் இறுதி வருடத்தில் சென்று கொண்டிருக்கின்றன. எனவே, அமைச்சர்கள் வேகமாக செயல்பட்டு கிழக்குமாகாண மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். 

இன்னும் ஒருவருடம் சென்றால் நீங்களும் முன்னாள் அமைச்சராகிவிடுவீர்கள் என்பதனை மனதில் வைத்து நமது கிழக்குமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுங்கள் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -