இன்டர்நெட் இல்லாமல் Whatsapp...!

சில நாட்களாக Whatsapp Messenger இல் இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு வருகிறது. Ultra-Light Wifi எனும் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடமெல்லாம் இலவச 3G இன்டர்நெட் இன் மூலம் Whatsapp இனை பயன்படுத்த முடியும் எனவும் அதனை செயற்படுத்த http://free-wifi-for-whatsapp.ay3.co/ எனும் லிங்க் இனை கிளிக் செய்யும் படியும் குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையை அறியாத பலர் Whatsapp Messenger இல் தனிப்பட்ட ரீதியிலும் குழுமங்களிலும் குறித்த தகவலை share செய்துள்ளனர்.

உண்மையில் இது ஒரு ஏமாற்று வேலையாகும். இவ்வாறு share செய்யப்படும் தகவலானது Whatsapp நிறுவனத்துடன் எவ்வித தொடர்புகளும் அற்றது. உண்மையில் இங்கு வழங்கப்பட்டுள்ள link ஆனது போலியான இணையத்தளம் ஒன்றிற்கான இணைப்புக்களை உருவாக்குகின்றது. இதன் மூலம் குறித்த இணையத்தளத்திற்கான வருகைகளை அதிகப்படுத்தவும் அதன் மூலம் அந்த இணையத்தளத்தினை உருவாக்கியவர் பணம் சம்பாதிக்கவுமே இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

இது போல அன்று வேறு சில link களின் மூலம் எமது Whatsapp அந்தரங்கங்கள் களவாடப்படுவதற்கு அதிகளவான வாய்ப்புக்களும் உள்ளன.

எனவே இவ்வாறான தகவல்களைக் காணும்போது செய்ய வேண்டிய மிகச் சிறந்த வேலை அவற்றினை அழித்துவிடுவதேயாகும்.

காமிஸ் கலீஸ்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -