ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
இ வெஸ்ட் கெம்பஸ் நிறுவனத்தினால் 1000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (02)சனிக்கிழமை கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இ வெஸ்ட் கெம்பஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பீ.எம்.எம்.ஜஃபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.றகீம், கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர்வீ.பிரபாகரன் உள்ளிட்ட கல்விமான்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவ, மாணவிகளுக்கு புலமைப்பரிசில் பெறுவதற்கான சான்றிதழினை பிரதி அமைச்சர் ஹரீஸ்உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.