அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குள் அடிப்படை சம்பளத்தில் இணைக்கும் பணிகள் நிறைவடையும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் குறித்த தொகை அடிப்படை சம்பளத்துடன் இணைந்த பின்னர் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,000 ரூபாவாக அதிகரிக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இம்முறை ஐ.தே.க மே தினத்தை பொரல்லை கம்பல் மைதானத்தில் நடாத்துவதாகவும் அதற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.