இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஹெரோயின் விநியோக மையமாக காணப்பட்ட மீகமுவ-துங்கல்பிட்டிய-லெபுன்கல பகுதியினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ருவன் குணசேகர இதன்போது தெரிவித்தார்.
குறித்த பகுதியை சுற்றிவளைத்தபோது இதனோடு தொடர்புடைய பாக்கிஸ்தானியர் கைது செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து மொண்டரோ வாகனத்தில் தப்பிசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக அதிவேக பாதைக்கருகில் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்
இதன்போது, குறித்த வாகனத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்தியா மற்றும் சிங்கபூர் பிஜைகள் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேலை, இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகப் பாரியளவிலான இந்த போதைப் பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பான விசாரணை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விரைவில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.
கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நல்லாட்சி அரசாங்க ஆட்சியில், அன்மைகாலத்தில் கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள் இவையாகும் என்பது குறிப்பிடதக்கது.