ஹக்கீம் 16 வருடங்களில் என்ன செய்துள்ளார்..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ஹகீம் அவர்கள் மர்ஹும் அஸ்ரப் மரணித்த பிற்பாடு முதல் முறையாக 19 அக்டோபர் மாதம் 2000 ம் ஆண்டு உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக , முஸ்லிம் அலுவல்கள் கப்பல் துறை அமைச்சை பொறுப்பெடுத்தார்.

இக் காலப் பகுதியில் இணைத் தலைவராக இருந்த பேரியல் அஸ்ரப் நிபந்தனை அற்ற ஆதரவு என்று சந்திரிக்காவுக்கு அதரவு வழங்கி கட்சியை மண்டியிட வைத்தபோது தலைவர் ஹகீம் கரையோர மாவட்டம் உட்பட பல்வேறு கோரிக்கையை முன்வைத்ததால் , ஆத்திரம் அடைந்த சந்திரிக்கா தலைவர் ஹகீம் அதிகம் டிமாண்ட் பண்ணுவதாகவும் கூட்டு பொறுப்பை மீறி செயற்படுவதாக குற்றசாட்டை முன்வைத்து 20/06/2001 இல் அமைச்சரவையில் இருந்து நீக்கினார் , பேரியல் அஸ்ரப் சந்திரிக்காவுடன் இருக்கத்தக்கதாக தலைவர் ஹகீம் பாரளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். 

குறுகிய ஒரு வருடத்தினுள் ஆட்சியில் இருந்து வெளியேற்ற பட்டதாலும் சந்திரிக்கா அம்மையார் கட்சியை உடைக்கும் வகையில் பேரியல் அஸ்ரப் அவர்களுக்கு அதிக நிதிகளை வழங்கி தலைவர் ஹகீம் அவர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு போதிய நிதிகளை வழங்காமையினாலும் இக்காலப்பகுதியில் தலைவர் ஹக்கீமால் அதிகளவு பாரிய பணிகளில் ஈடுபட முடியவில்லை

பின் 2001 இல் நடை பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவையில் 2001 டிசம்பர் தொடக்கம் ஏப்ரல் 2004 வரை தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக செயட்பட்டார் இக்காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிக்கா ஒரு கட்சியையும் பிரதமர் இன்னுமொரு கட்சியை சேர்ந்து இருந்ததால் ஜனாதிபதி பல்வேறு முட்டுக்கட்டைகளை ஐக்கியதேசிய கட்சிக்கு போட்டதுடன் அக்காலபகுதியில் சந்திரிக்கா அம்மையார் யுத்தத்திற்காக அதிக கடன்களை வெளிநாட்டில் பெற்று இருந்தமையால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொருளாதாரத்தை சீர் செய்யும் வகையில் 2 வருடங்களுக்கு எந்தவித அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்ற கொள்கையை பின்பற்றியது , இதுவும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அடுத்து வந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு பிரதான காரணமாக இருந்தது,.இதனால் தலைவர் ஹகீம் அவர்களால் அதிகளவு அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கவில்லை ,

2004 இல் சந்திரிக்கா அம்மையார் தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற காலம் முடியும் முன் தேர்தலை நடத்தினார் , அதில் தோல்வி அடைந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் தோழமை கட்சியாக இருந்த எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைவர் ரவுப் ஹகீம் எதிர்கட்சி பாரளுமன்ற வரிசையில் 2004 தொடக்கம் 2007 வரை இருந்தார் , எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அபிவிருத்தி செய்வது என்பது இயலாத காரியமே .

பின் 28 ஜனவரி 2007 தொடக்கம் மகிந்த தலமையிலான அரசில் இணைந்து கப்பல் துறை அமைச்சை பொறுப்பெடுத்த தலைவர் ரவுப் ஹகீம் இணையும்போது மகிந்த அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளபட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதால் அதே ஆண்டு 16 டிசம்பர் 2007 இல் அரசைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார் ,

பின்னர் கட்சியை மகிந்த அழிக்க எத்தனித்ததால் மீண்டும் மகிந்த அரசில் 22 நவம்பர் 2010 இல் இணைந்து நீதி அமைச்சை பொறுப்பெடுத்தார் 28 டிசம்பர் 2014 வரை நீதி அமைச்சராக இருந்த போதிலும் தலைவர் ஹகீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கான்கிரசை அழிக்க வேண்டும் என்பதில் மகிந்த அரசாங்கம் குறியாக இருந்தமையினாலும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை பாராளுமன்றிலும் , வெளியிலும் அமைச்சரவையிலும் சர்வதேசத்துக்கு முன் கொண்டு சென்றதால் முஸ்லிம் காங்கிரசை மகிந்த அரசாங்கம் எதிரியாகவே பார்த்தது , அபிவிருத்தி விடயங்களில் முஸ்லிம் காங்கிரசை எதிர்க்க்கட்சி போன்றே நடத்தியது , முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளாக இருந்த அமைச்சர் ரிசாத் , ஹிஸ்புல்லாஹ் ,மற்றும் அதாவுல்லாஹ் போன்றோரை முஸ்லிம் காங்கிரசை அளிக்கும் நோக்கில் செல்லப்பிள்ளைகள் போன்று வளர்த்து அவர்களுக்கு வேண்டிய நிதிகளை அள்ளிக்கொடுத்தது .

இவ்வாறான காரணிகளே முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் அவர்களால் அதிகளவு அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பாக அமையவில்லை . மகிந்த போட்டியிட்ட 3 தேர்தல்களிலும் அவரை எதிர்த்து செயற்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே

2015 க்கு பிறகு இறைவனின் உதவியுடன் முஸ்லிம் கான்கிரசிக்கு ஓரளவு சாதகமான ஆட்சி இருப்பதால் முஸ்லிம் காங்கிரஸ் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியில் கூடிய கரிசனை காட்டுகிறது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -