எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயத்தில் பத்தொன்பது இலட்சம் ரூபாய் செலவில் சகல வசதிகளுடன் மலசலக்கூடம் அமைக்கப்பட்டு வருவதாக அப்பாடசாலையின் பொதுச் செயலாளர் ஏ.சி.எம்.ஜவாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை(3) தெரிவித்தார்.
கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட தி/அல் தாரிக் மகா வித்தியாலயத்தின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலமாக இவ் மலசலக்கூடம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இப்பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருவதனால் இம்மலசலகூடம் அமைக்கப்படுவதாலும் குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
இம்மலசலகூடம் அனைத்து வேலைகளையும் நிறைவு செய்து மே மாதம் பாடசாலை மாணவர்களின் பாவணைக்கு கையளிக்கப்பட வேண்டும் எனவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சி.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.