உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த ஆண்டில் ஊடக சுதந்திரம் வீழ்ச்சிகண்டுள்ளதாக ஊடகத்துறையை கண்காணிக்கும் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்ளும் புதிய காலகட்டத்தில் உள்ளோம் என்று எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற கண்காணிப்பு அமைப்பே இதை தெரிவித்துள்ளது.
தனியார் துறையினரால் நடத்தப்படும் ஊடக நிறுவனங்கள் அதிக அளவில் வணிக நோக்கத்தை மையப்படுத்தி செயற்படும் அதேவேளை, உலகத் தலைவர்கள் பலரும் ஊடகம் மீது ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதாக அந்த கண்காணிப்பு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஊடக சுதந்திர பட்டியலில் லத்தின் அமெரிக்க நாடுகள் பழைய நிலையிலிருந்து மேலும் சரிந்துள்ளன.
முதல் மூன்று இடங்களில் பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் உள்ளன.
தகவல்:இணையம்