றிசாத் ஏ. காதர்-
அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 11பேர் கொண்ட 8ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் (03.04.2016) நேற்று கோணாவத்தை மார்க்ஸ்மேன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பைனா மற்றும் அட்டாளைச்சேனை புளு லெவன் விளையாட்டுக் கழகங்கள் மோதிக்கொண்டன.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்கள் முடிவில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 52ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பைனா அணி சார்பாக அறூஸ் 21ஓட்டங்களையும், நிப்ராஸ் 12ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 53 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புளு இலெவன் அணியினர் 8ஓவர்கள் முடிவில் 53ஓட்டங்களை; பெற்று வெற்றியைத் தழுவிக் கொண்டனர்.
புளு இலவென் அணி சார்பாக சப்னாஸ் 14ஓட்டங்களையும், கஸ்ஸாலி 10ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக புளு இலவென் அணியின் வீரர் சப்னாஸ் தெரிவானார்.
இப்பிராந்தியத்தில் உள்ள 16 முன்னனி விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில் புளு இலவென் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தையும் ஏழாயிரம் ரூபா பணப்பரிசினையும் சுவிகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற புளு இலவென் விளையாட்டுக் கழகத்திற்கான பணப்பரிசு , “2016 வெற்றிக் கிண்ணத்தினை” நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த பிரபல தொழிலதிபரும் மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகருமான எம்.சீ.குத்தூஸ் அணித்தலைவர் ஜே.பஸ்மீர் ஆசிரியரிடம் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டபைனா விளையாட்டுக்கழகத்தினருக்கான பணப்பரிசு, வெற்றிக் கிண்ணத்தினை கிராம சேவையாளர் அப்துல்லா வழங்கிவைத்ததுடன், சிறப்பாட்டக்காரருக்கான கிண்ணத்தினை கிராம சேவையாளர் எம். அஸ்லம் சஜா வழங்கி வைத்தார்.