ட்றை ஸ்டார் கானிவல் - 2016 - புளு மூன் சம்பியன்

அய்ஷத் ஸெய்னி-
பாலமுனை ட்றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கானிவல் 2016 நிகழ்வின் இரண்டாம் கட்டமான 'வொலிபோல் நைட்" 2016.04.22 ல் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. 

கழகத்தின் தலைவர் எம்.எச்.எம். ஜெஸ்பர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் ட்றை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்கள் பிரதம அதியாக கலந்து சிறப்பித்தார்.

மிகவும் ஆக்ரோசமாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற வொலிபோல் நிகழ்வின் இறுதிப்போட்டிக்கு பிளக் றைடர்ஸ் அணியும் ,புளு மூன் அணியும் தெரிவாகியதுடன் புளுமூன் அணியானது இறுதிப்போட்டியி்ல் வெற்றி பெற்று 2016 ட்றை ஸ்டார் கானிவல் வொலி போல் சம்பியனாக தெரிவானது. 

ட்றை ஸ்டார் கானிவல் 2016 ன் மூன்றாம் கட்டமான எல்லே போட்டித் தொடர் 2016.04.24 ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -