எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் போட்டன்காடு பாலத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் திங்கட்கிழமை 11 ஆம் திகதி பிற்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் இருபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு மூலமாக இப்பாலம் புனரமைக்கபடவுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழைமையான பாழங்களுள் கந்தளாய் போட்டங்காடு பாலமும் ஒன்றாகும்.
இப்பாலத்தில் இணைக்கப்பட்டிருந்த கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து உடைத்ததால் இப்பாலத்தினூடாக போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் இருந்த வேளையிலே இப்பிரதேச மக்கள் அனைத்து அரசியல் வாதிகளிடம் கேட்டும் புனரமைக்காத நிலையிலே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முன்வந்து முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளதாகவும், பிரதேச மக்கள் தமது நன்றியைத் தெரிவிப்பதோடு இப்பாலம் புனரமைக்கப்படும் பட்சத்தில் பெரும்பாலானோர் நன்மையடைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.