2.1 மில்லியனில் சிறந்த வீடுகள் கிடைக்க வழிவிடுங்கள் - இவ்வீட்டுப் பிரச்சினை நல்லாட்சியிலும் தொடரக்கூடாது

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-

இன்று ஊடகங்களில் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட உள்ள 65000 வீடுகளைப் பற்றிய விமரிசனங்கள் அதிகம் வெளிவருவதைத் தினம்தினம் காணமுடிகிறது.

கடந்தகாலங்களில் வீடமைக்க நிறுவனங்களால் 325000.00,550000.750000. போன்ற அடிப்படையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் தற்போதய நிலையில் ஒரு வீடுகட்ட 2.1 மில்லியன் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வீடுகளை இந்திய நிறுவனம் ஒன்று கட்டிக்கொடுக்க உள்ளது. இரும்பாலும்,பிளாஸ்ரிக் கலந்த கொங்ரீட் இணைப்புகளாலும் இவ்வீடு அமைக்கப்படவுள்ளது.அதன் கூரை ஹீட்புரூப் தகடுகளால் அமைக்கப்பட உள்ளதாக அறிகிறோம்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீர்வசதி, வைபை வசதி,தளபாட வசதி என்பனவும் வழங்கப்பட உள்ளன.

வடக்கு முதல்வர் சொல்கிறார் இவ்வீடுகள் நீண்டகாலம் நீடிக்காது. அப்பிரதேச சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது என்பதுடன் ஒரு வீடுகட்டச்செலவாகும் 2;.1 மில்லியனுக்குள் 3 வீடுகள் கட்டலாம் என்கிறார்.திரு.சிறிதரன் பா.உ.சொல்கிறார் வீடு கட்டாமல் 10,00000.00 கொடுத்தால் மக்கள் வீடுகளைச் சிறப்பாகக் கட்டிக்கொள்வர் என்று, விலைவாசி அதிகரிப்பை இவர்கள் அறியவில்லை போலும்.

இம்மக்களிற்காக திட்டமிடப்பட்ட 2.1 மில்லியனை ஏன் குறைக்கச் சொல்கிறீர்கள்.அதே தொகையில் சீமெந்து கற்களால் அல்லது செங்கல்லால் கட்டப்பட்ட ஓடுகளைக் கூரைகளாகக் கொண்ட வீடுகளைக் கட்டிக்கொடுக்கச் சொல்லுங்கள். அல்லது அப்பணத்தை மக்களுக்குக் கட்டங்கட்டமாகக் கொடுத்து கண்காணித்து கட்டத்தூண்டச் செய்யுங்கள்.இதனைவிடுத்து மக்களுக்குக் கிடைப்பதை குழப்பி விடாதீர்கள்.

இவ்வீட்டுப் பிரச்சினை மைத்திரி யுக நல்லாட்சியிலும் தொடரக்கூடாது மக்களின் கருத்துக்கணிப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படட்டும்.இவ்வீட்டுத் திட்டம் தொடர்பில் எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனித்திருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -