2கோடி ருபா செலவில் சம்மாந்துறையில் விதைநெல் சுத்திகரிப்பு நிலையம்...!

காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறையில் யு.என்.டி.பி. அனுசரணையுடன் சுமார் 2கோடி ருபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள விதைநெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கான
அடிக்கல்நடுவிழா அக்றோ குறூப் விதைநெல் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் அல்ஹாஜ் எ.எம்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாகக்கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டனர். அவர்
பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்து அடிக்கல் நட்டார்.

கௌரவ அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர்களான கே.விமலநாதன் எம்.ஜ.எம்.அமீர் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ .மன்சூர் சம்மாந்துறை பிரதேச சபைச் செயலாளர் ஏ.ஏ. சலீம் யு.என்.டி.பி. பிராந்திய திட்ட இணைப்பாளர் எஸ்.ரகுநாதமூர்த்தி கள இணைப்பாளர் பி.மனோஜ் களதிட்ட இணைப்பாளர் எச்.எம்.ஜவாஹிர் பொறியியலாளர் ஏ.விமலநாதன் விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எ.ஆர்.எ.லத்தீப் மற்றும் எம்.எஸ்.எ.கலீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் உரையாற்றுகையில்:

இவ்வதைநெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு யு.என்.டி.பி. நிறுவனம் கட்டடத்திற்கு 1கோடி 43லட்சத்தையும் இயந்திர உபகரணங்களுக்கு 50லட்சருபாவையும் ஒதுக்கியுள்ளது. தரமான விதைநெல் தேடி இதுவரைகாலமும் எமது மாவட்ட விவசாயிகள் அலைந்த காலம் இனிமேல் ஏற்படாது.

இன்று அடிக்கல்நடும்போது பெய்தமழை இறைவனின் ஆசீர்வாதமாகும். இந்நலையம் அம்பாறை மாவட்டத்திற்கு சேவையாற்றவேண்டிய கட்டாயமுள்ளது.

தேவைப்பட்டால் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் தரமான விதைநெல்லை
விநியோகிக்க தயாராகவேண்டும்.என்றார். அடிக்கல் நடும் வேளையில் சிறுமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -