விளையாட்டுத்துறை அமைச்சின் MS/06/04/03-18ம் இலக்க 2016.03.24ம் திகதியிடப்பட்ட கடிதம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிதியினைக் கொண்டு மைதானத்திற்கு மண்ணிரப்புவதற்கான வேலைத்திட்டத்தினைஆரம்பிக்கவுள்ளதாகவும் யூ.எல் தௌபீக் தெரிவித்தார்.
பிரதிஅமைச்சரினால் ஏற்கனவேமைதானத்தின் சுற்றுமதிலுக்கானஅடிக்கல் நடப்பட்டுசெய்துமுடிக்கப்பட்டவேலைகளில் குறையாகஉள்ளஅபிவிருத்திகள் மற்றும் அதிதிகள் அரங்குநுழைவாயில் எனமீதமாகவுள்ளஅபிவிருத்திவேலைகளைஅடுத்தகட்டநிதிஒதுக்கீடுகளில் செய்துதருவதற்குபிரதிஅமைச்சர் உறுதியளித்ததாக யூ.எல் தௌபீக் மேலும் தெரிவித்தார்.
மேலும் இவ்வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிரதிஅமைச்சர் அவர்களினால் ஜூம்ஆபள்ளிவாசல் உள்ளக வீதி புணரமைப்பிற்காக 5 லட்சம் ரூபாய்களையும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் 2 லட்சம் ரூபாய்களும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடுகட்சியின் ஏனைய பாரளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மூலமாகவும் இன்னும் பலஅபிவிருத்தித் திட்டங்களினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நற்பிட்டிமுனையின் பொது அபிவிருத்திகளில் அக்கறை காட்டிவரும் பிரதி அமைச்சர் அவர்களுக்கும் ஏனைய பாராளுமன்றஉறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் நற்பிட்டிமுனை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.