மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலய புதிய கட்டடத்திற்காக 35 இலட்சம் ஒதுக்கீடு - பொறியியலாளர் சிப்லி பாறுக்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலயத்திற்கு அண்மையில் திடீர் விஜயமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டிருந்தார்.
அதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் கடந்த வருடம் இப்பாடசாலையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் வேலைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருப்பதனை பார்வையிட்டதுடன். மேலும் இவ்வருடம் 25X90 அடி அளவிலான புதியதோர் கட்டிடம் அமைப்பதற்கு 6.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக 3.5 மில்லியன் ரூபா நிதி இவ்வாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுடன் புதிய கட்டிடம் அமைக்கும்பொழுது எவ்விடத்தில் புதிய கட்டிடத்தினை அமைப்பது, அதன்போது மாணவர்களை எங்கு மாற்றுவது தொடர்பாகவும் எவ்வாறு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு அதற்கான மாற்று நடவடிக்கைகள், ஆலோசனைகள் என்பன மேற்கொள்ளப்பட்டது.
இக்கட்டடத்திற்கான மதிப்பீடு தயாரிப்புக்கான ஆலோசனைகள் பொறியியலாளருக்கும், தொழிநுட்ப உத்தியோகத்தருக்கும் கழவிஜயத்தின் போது வளங்கப்பட்டதுடன் ஏற்கனவே கட்டப்பட்டு கொண்டிருக்கும் கட்டட வேலைகளை விரைவாக முடிவுறுத்தும்படி உத்தரவிட்டார்.
மேலும் புதிய கட்டடத்திற்கான விலை மணுக்கோரல் எதிர் வரும் ஜூன் மாதத்திற்குள் கோரப்பட்டு இவ்வாண்டு முடிவிற்குள் உரிய வேலைகள் நிறைவுற வேண்டுமென பணிப்புரை விடுத்தார்.