4 மணியுடன் இழுத்து மூடப்படும் அக்கரைப்பற்று வெளிநோயாளர் பிரிவு-மக்கள் அவதி

எம்.வை.அமீர்-

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு நான்கு மணியுடன் மூடப்படுவதாக அறிய முடிகிறது. இது சம்மந்தமாக இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் செய்தியாளர் வைத்திய அத்தியேட்சகரிடம் வினவியபோது:

வைத்தியர்களின் பற்றாக்குறையின் காரணமாக குறித்த வெளிநோயாளர் பிரிவை தொடர்ந்து நடத்திச்செல்ல முடியாமல் உள்ளதாகத் தெரிவித்த அவர் கடந்த காலங்களில் மாலை 4 மணிக்கு பின்னரும் இயங்கியதாகக் கூறினார். 

எனவே பொத்துவில் தொகுதியின் முக்கிய பெரும் வைத்தியசாலையாகக் கருதப்படும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இதே தொகுதியில் மத்திய சுகாதாரப் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் இருந்தும் இப்படியொரு துர்ப்பாக்கிய நிலையா..?

ஆனால் கல்முனை வடக்கு வைத்தியசாலையிலும், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் இரவு 8 மணி வரையும் வெளி நோயாளர் பிரிவு இயங்கும் போது..
 ஏன் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு இந்த அவல நிலை.......

அமைச்சர்களே... இது உங்களின் கவனத்திற்கு....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -