மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச். முஹம்மட் அவர்களுடன் கடந்த 50 வருட கால நினைவுகள் - SMA கபூர்

ண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான எம்.எச். முஹம்மட் அவர்கள் 1965ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அப்போதைய பிரதம மந்திரி திரு டட்லி சேனநாயகாவின் அரசாங்கத்தில் தொழில் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் திருக்குர்ஆன் அருளப்பட்டு 1400வது நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்ட வேளையில் அப்போதைய அரசு விசேடமாக ஒரு முத்திரையையும் வெளியிட்டு இந்நாட்டில் வாழும் முஸ்லிங்களை கௌரவ படுத்தியமைக்காக, 

எமது 'அட்டாளைச்சேனை வாளிபர் முற்போக்கு முன்னணி' சார்பாக அரசிக்கும் அன்றைய தபால் தந்தி அமைச்சர் திரு மொண்டேகு ஜயவிக்கரம பெரேரா, உள்நாட்டு அமைச்சர் டாக்டர் டபிள்யூ. தஹாநாயக அவர்களுக்கும் நன்றி தெரிவித்து நான் பேசிய கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அமைச்சர் எம்.எச். முஹம்மட் அவர்களுக்கு அனுப்பிய விடயம் தொடர்பாக, அன்றைய தினகரன் பத்திரிகையில் முன்பக்க செய்தி 1966ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அது வெளிவந்தமைக்கான ஆதாரமாக அதன் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்பு அக்கடிதத்திற்கு நன்றி தெரிவித்து எம்.எச். முஹம்மட் அவர்களின் அந்தரங்க செயலாளர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களினால் எங்களுக்கு அதற்கான பதில் கடிதமும் கிடைக்கப் பெற்றது. இதன் பின்பு மறைந்த அமைச்சர் அவர்களுடன் இணைந்து நாம் மிக நீண்ட கால தொடர்புகளை கொண்டிருந்தோம். 

குறிப்பாக அந்நாட்களில் எம்.எச். முகம்மட் அவர்களின் தலைமையிலான 'மார்க்சிய எதிர்பு முன்னணி' மூலம் எமது பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மேடைகளிலும் நாம் ஏறி பிரச்சாரம் செய்த வரலாறுகள் நிறையவே உண்டு. அப்போது இப் பகுதியில் இதன் இணைப்பாளராக முன்னாள் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. லத்தீப் சின்னலெப்பை அவர்களும் செயல்பட்டார். 

இதன் பின்பு 1977ம் ஆண்டு மீண்டும் ஐக்கி தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது அதில் சிரேஷ்ட அமைச்சராக இருந்த ஜனாப் எம்.எச். முஹம்மட் அவர்களை எமது இலங்கை சட்டக்கல்லூரியின் முஸ்லிம் விழாவுக்கு அதன் அமைப்பாளராக இந்த நான், அவ்விழாவின் பிரதம விருந்தினராக கௌரவப்படுத்தி அதில் கலந்து கொள்ளுமாறு அழைத்தபோது தான் ஒரு சட்டத்தரணி இல்லாத காரணத்தினால் இந்நிகழ்வில் கலந்து கொள்வது பொருத்தமில்லை என முதலில் மறுப்பு தெரிவித்தும் பின்பு எங்களின் வற்புறுத்தனின் பெயரில் பெருமனதுடன் அவ்வழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்தார். 

அந்நிகழ்வில் அன்னாருக்கு நான் சிறப்புப் பிரதியை வழங்கிய போது எடுத்துக் கொண்ட புகைப்படமும் இதற்கு ஆதாரமாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இப்படி பல இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் அரசியல், முஸ்லிம் கலாச்சார வைபவங்கள் பலவற்றில் கலந்து கொண்டதன் மூலம் எங்களின் பழைய தொடர்புகள், அரசியல் உறவுகள் 'மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம்' வரை நீடித்தது. 

இதன் காரணமாக பல வருடங்களுக்கு முன்பு எனது மகளின் திருமண வைபவம் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்போது ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட அத் திருமண நிகழ்வுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களும் அண்மையில் மறைந்த அமைச்சர் எம்.எச்.முஹம்மட் அவர்களும் இரு சாட்சிகளாக மேற்படி இருவரும் அத்திருமணப் பதிவுப் புத்தகத்தில் எங்களின் உறவினர் போன்று கலந்து கொண்டு தங்களது கையொப்பங்களையிட்ட அவ்வைபவத்தை சிறப்பித்த நிகழ்வினையும் இத்தருணத்தில் நான் மிகுந்த நன்றியுடன் நினைத்துப்பாக்கிறேன் (அல்ஹம்துலில்லாஹ்) அதற்கான ஆதாரபூர்வமான அத்திருமணப் புகைப்படமும் இத்துடன் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 

எனவே எங்களை விட்டும் அண்மையில் பிரிந்த அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னித்து 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்னும் சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக என வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேலும் இன்றைய எமது அரசியலில் முக்கிய முன்னணி முன்வரிசை உறுப்பினர்களின் முக்காவாசிப்பேர் அப்போது பிறந்தும் இருக்கமாட்டார்கள் என்பது வெறும் கற்பனைக் கதையல்ல இது நிஜம் (2016 -- 1966 ஸ்ரீ 50 வருடங்கள்) என முஸ்லிம் காங்கிரசின் மூத்த பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ கபூர் ஆகிய நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -