சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பவர்களுக்கு ரூ. 5000 - 25000 வரை கொடுப்பனவு – பாதுகாப்பு செயலாளர்

ட்டவிரோத துப்பாக்கிகளை அரசிடம் கையளிப்பதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2016 ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மே மாதம் 06 ஆம் திகதி வரை சட்டவிரோத துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எந்தவித தண்டப்பணம் செலுத்தாமல் தமது துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க முடியும்.

இன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இது தொடர்பாக தெரிவித்தார்.

அருகிலுள்ள பொலிஸ் நிலையம், மாவட்ட செயலாளர் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இவ்வாரான சட்டவிரோத துப்பாக்கிகளை இந்த பொது மன்னிப்பு காலத்தில் கையளிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோத அல்லது அனுமதியற்ற தீ ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்படவுள்ளது. அதன்படி, சன்னத் துப்பாக்கி அல்லது அதற்க்கு சமனான தீ ஆயுதங்களுக்கு (கல்கடஸ்/கட்டுத்துவக்கு) 5,000 ரூபாவும், பிஸ்டல்/ரிவால்வருக்காக 10,000 ரூபாவும், டீ56 வகையிலான துப்பாக்கிகளுக்கு 25,000 ரூபாவும் சன்மானம் வழங்ககப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

குறித்த பொது மன்னிப்பு காலத்தினுள் சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் 2016.05.06 ஆம் திகதியின் பின்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -