க.கிஷாந்தன்-
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மட்டகளப்பு பாசிக்குடா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி செனன் - வூட்லேண்ட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
19.04.2016 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
19.04.2016 அன்று பெய்த மழையினால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சாரதி மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் அடங்களாக ஐந்து பேர் பயணித்துள்ளனர். எனினும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கார் மட்டகளப்பு பாசிக்குடா பகுதிக்கு குடும்பத்தாருடன் சுற்றுலா பயணம் சென்று மீண்டும் தனது வீட்டிற்கு செல்ல ஹட்டன் நோக்கி சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுகின்றமையினால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.