பெற்றோல் ஒரு லீட்டர் 59 ரூபா 39 சதத்துக்கும், டீசல் ஒரு லீட்டர் 79 ரூபாவுக்கும் விற்பனை செய்ய அரசாங்கத்துக்கு முடியும் என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
மிக விரைவில் கொண்டு வருவதாக கூறப்பட்ட எரிபொருள் சூத்திரத்தை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நாள் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என கொண்டுவந்துள்ள பிரேரணைக்கும் மக்கள் விடுதலை முன்னணி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இது நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் மற்றுமொரு பாரிய சுமை எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது