சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவிற்கு சொந்தமான வங்கி கணக்குகள் 5ஐ பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(புதன்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது குற்றபுலனாள்வு திணைக்களம், குறித்த 5 வங்கி கணக்குகள் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சரின் இராஜகிரியவில் அமைந்துள்ள வீடு தொடர்பாகவும் அந்த திணைக்களம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தது.