பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவரது பாவனைக்காக அரசால் வழங்கபடும் வாகன அனுமதி நிதி ஒதுக்கீட்டை 700 இலட்சமாக அதிகரித்து தரவேண்டும் என அமைச்சரவையில் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
700 லட்சம் மதிப்புடைய பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார் ஒன்றை தனது பாவனைக்காக வரவழைக்க எதிர்பார்ப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஒருவருக்காக வாகனம் வாங்குவதற்காக அரசு ரூ 350 இலட்சத்தை ஒதுக்கிவரும் நிலையில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரின் இந்த கோரிக்கை அமைச்சரவையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட கார் சுமார் 10 கோடி வரை விலை செல்வதாக தெரிவிக்கபடுகிறது.
அமைச்சர் விஜயாதாசவுக்கும் பீல்ட் மார்ஷலுக்கும் முருகல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தொடர்பாக பீல்ட்மார்ஷல் என்ன சொல்கிறார் என பொருத்திருந்து பார்க்கவேண்டும்.