எப்.முபாரக்-
திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் 87 கிலோகிராம் பன்றி இறைச்சியை சிறிய ரக வாகனமொன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இரண்டு பேரை இன்று புதன்கிழமை (6)அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திரியாய் -கள்ளம்பத்த வீதியினூடாக சென்றுகொண்டிருந்த குறித்த வாகனத்தை இடைமறித்துச் சோதனையிட்டபோது, அதில் பன்றி இறைச்சி இருந்தமை தெரியவந்துள்ளது.
கோமரங்கடவெல, கிவ்லகட பகுதியைச் 45, மற்றும் 41 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனம் பொலிஸ் நிவையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் , நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.