விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் 'கிராமத்திற்கு தொழில்நுட்பம்'எனும் தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில்நிர்மாணிக்கப்பட்ட விதாதா வள நிலைய புதிய கட்டிட திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமைஇடம்பெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் விஞ்ஞான,தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாககலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணிஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட், அமைச்சின்செயலாளர், உதவி செயலாளர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள், மாணவர்கள், விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருதில் கண்டு பிடிக்கப்பட்ட நவீன தொழிநுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் மற்றும் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் அடங்கிய காண்காட்சியினை அமைச்சர்கள் உள்ளிட்டஅதிதிகள் பார்வையிட்டனர்.
இதன்போது விதாதா வள நிலையத்தில் கணனி பயிற்சியை நிறைவு செய்தமாணவர்களுக்கும், பிரதேசத்தில் புதிய தொழிநுட்ப உபகரணங்களை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்களுக்கும் அமைச்சர்களினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.