ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி உயர்வு - பாரிய மாற்றம்

டந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் வீழ்ச்சி நேற்று சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டமை, பங்குச் சந்தை வீழ்ச்சி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மற்றும் சொத்துக்களில் ஏற்பட்ட தளம்பல் என்பன காரணமாக கடந்த சில வாரங்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், உள்நாட்டு நுகர்வோருக்கு அதன் நன்மையைப் பெற முடியாது போயிருந்தது.

அத்துடன் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி விலையும் அதிகரித்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு அமெரிக்க டொலர் 150 ரூபாவின் பெறுமதிக்கு நிகராகும் வகையில் இலங்கையின் நாணய மதிப்பு தாழ்ந்திருந்தது. இது வரலாறு காணாத நாணயப் பெறுமதி வீழ்ச்சியாகும்.

இந்நிலையில் நேற்று இலங்கையின் ரூபா மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் டொலரின் பெறுமதி 146 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு ரூபா அளவில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -