என்ன தேவையானாலுல் என்னிடம் தாராளமாக வரலாம் - சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால்காசிம் அறைகூவல்

ற்போதைய தேர்தல்முறைமையின்கீழ் விருப்புவாக்கு காரணமாக இனம்சார்ந்த செயற்பாடுகள் நிதியொதுக்கீடுகள் இடம்பெறுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் வரப்போகின்ற புதிய கலப்பு தேர்தல்முறைமையின்கீழ் நாமெல்லாம் ஒருதொகுதி மக்கள். ஒன்றாக இணைந்து சேவையாற்றவாய்ப்புள்ளது. இனமத பேதமில்லாமல் சந்தோசமாக எமது வாழ்க்கையை முன்னெடுக்கலாம். எனினும் சமகாலத்தில் தமிழ் மக்கள் என்ன தேவையானாலுல் என்னிடம் தாராளமாக வரலாம்.

இவ்வாறு காரைதீவுப்பிரதேச ஒருங்ணைப்புக்குழுக்கூட்டத்தில் உரையாற்றிய ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் சுகாதார பிரதியமைச்சருமான எ.சி.எம்.பைசால்காசிம் அறைகூவல் விடுத்தார்.

இக்கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த் முன்னிலையில் திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

உதவி திட்டமிடல் அதிகாரி திருமதி திலகராணி கிருபைராஜா இவ்வருடத்திற்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக காணொளியின் துணைகொண்டு விளக்கினார். இவ்வருடம் காரைதீவுப்பிரதேசத்திற்கு மொத்தமாக 31லட்சம் ருபா ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதியமைச்சர் ஹரீஸின் 10லட்சருபா விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

சுகாதார பிரதியமைச்சர் எ.சி.எம்.பைசால்காசிம் மேலும் உரையாற்றுகையில்..

காரைதீவுப்பிரதேச இணை ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களாக நானும் அமைச்சர் தயா கமகேயும் கோடிஸ்வரன் எம்.பியும் நியமிக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இக்கூட்டத்தை மூவரும் இணைந்து நடாத்துவதற்கு திகதி தீர்மானிக்க கலந்துரையாடினால் அவர்களுக்கு திகதி பொருத்தமானதாக இல்லை. ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பணிகள். உண்மையில் மூவரும் இணைந்து நடாத்துவதுதான் நல்லது.

என்னைப்பொறுத்தவரையில் நிந்தவூருக்கும் காரைதீவுக்கும் நிறைய அந்னியோன்ய தொடர்புகள் இருந்துவருகின்றன. எனது தந்தையாருக்கு காரைதீவுக்குள் நிறையதொடர்புகள் அன்றிருந்தன. வருடாந்தம் மிகவும் சுவையான பலாப்பழம் எமக்கு கிடைக்கும்.

இங்கு பல தேவைகள் பல கோரிக்கைகள் என்னிடம் முன்வைக்கப்பட்டன.உண்மையில் இவ்வாண்டுக்கான எனது ஒதுக்கீடுகள் யாவும் முடிந்துவிட்டன.

எனினும் பாடசாலை ஆராதனை மண்டபத்திற்கு கதிரைகள் தேவையென இ.கி.மி.பெண்கள்பாடசாலை அதிபர் எஸ்.மணிமாறனும் விபுலானந்த மத்தியகல்லூரியின் பாடசாலைஅபிவிருத்திச்சபைச் செயலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கேட்டுக்கொண்டதற்காக இவ்விரு பாடசாலைக்கும் 1லட்சம் ருபாவை தருகிறேன்.

மேலும் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்திற்கு மின்சார இணைப்புக்கும் அல்ஹூசைன் வித்தியாயலயத்திற்கு உள்ளக மின் விநியோக செயற்பாட்டிற்கும் உதவவுள்ளேன். மேலும் மலசலகூடம் தேவைப்பட்ட விஸ்ணு வித்தியாலயம் சபீனா வித்தியாலயம் உள்ளிட்ட 3 பாடசாலைகளுக்கு தலா 1லட்சம் ருபா ஒதுக்கவுள்ளேன்.

சண்முகா வித்தியாலயத்திற்கு தெற்காகவுள்ள வீதி வடிகான் தொடர்பாக அதிபர் இ.ரகுபதி தெரிவித்த பிரச்சினை தொடர்பில் பிரதேசசபை நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மாவடிப்பள்ளி கலாசார மண்டபத்திற்கு பிரதியமைச்சர் ஹரீசும் நானும் ஏலவே ஒதுக்கியுள்ளோம். அவற்றைப்பயன்படுத்தி அதனை முற்றாக பூர்த்திசெய்யவும்.என்றார்.

காரைதீவு கமநலசேவைப்பிரிவின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எமது எல்லைக்குள் வரும் சில காணிகள் அநாதையாகவுள்ளன. அவை இனங்காணப்படவேண்டுமெனவும் வெட்டுவாய்க்கால் உள்ளிட்ட சில வயல்வீதிகள் வாய்க்கால்கள் சிறு அணைக்கட்டுகள் வான்கதவுகள் திருத்தப்படவேண்டுமெனவும் காரைதீவு கமநலசேவைஉத்தியோகத்தர் எம்.சிதம்பரநாதன் வேண்டுகோள்விடுத்தார்.

விபுலானந்த மத்தியகல்லூரி வீதி விவகாரம் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தேசிகர்வீதி மத்தியவீதி சித்தானைக்குட்டி வீதி வடிவேல் வீதி மாளிகைக்காடு சபீனாவீதி மாவடிப்பள்ளி உள்வீதிகள் பற்றயெல்லாம் கலந்துரையாடப்பட்டு முன்னுரிமையடிப்படையில் செப்பனிட இணக்கம் காணப்பட்டது.

மதுசாலை மூடப்படவேண்டுமென இருசமுகமும் சேர்ந்து வேண்டுகோள்விடுத்தது. அரைகுறையாகவுள்ள காரைதீவின் கலாசார மண்டபம் பூர்த்தி செய்யப்படவேண்டுமெனவும் மத்தியவீதியிலுள்ள 4 கோஸ்வேக்கள் மற்றும் ஆழமான சிறுமடு பற்றியும் பிரஸ்தாபித்து அவை நிவர்த்திக்கப்படவேண்டுமெனவும் வேதசகா குரல் எழுப்பினார். 

அதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியோடு தொடர்புகொண்டு தீர்வுகாணப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -