அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு..!

ஹாசிப் யாஸீன்-
ம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ரூபா 70 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலைகளின் மைதான அபிவிருத்தி, பாண்டிருப்பு விளையாட்டு மைதானம் அபிவிருத்தி என்பவற்றிக்கு தலா ரூபா 10 லட்சம் படி ரூபா 30 லட்சமும், காரைதீவு கனகரெட்னம் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ரூபா ரூபா 10 லட்சமும், திருக்கோவில் விளையாட்டு மைதான அபிவிருத்திற்கு ரூபா 30 லட்சமுமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மைதான அபிவிருத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி வேலைகளை உடன் ஆரம்பிக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திகாமடுல்ல மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் தமிழ் பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதை தொடர்ந்து இந்நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -