ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'நன்றி நவிலலும் பகற்போசன விருந்துபசாரமும்' நிகழ்வும்..!















பி. முஹாஜிரீன்,ஷபீக் ஹூஸைன்-

பாலமுனையில் கடந்த 19ம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு வெற்றி மாநாடாக நடந்தேறுவதற்கு ஏற்பாடுகள் செய்தவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் 'நன்றி நவிலலும் பகற்போசன விருந்துபசாரமும்' நிகழ்வு இன்று சனிக்கிழமை (02) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு நகர திட்மிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழக்கம் ஏ.எம். அப்துல் மஜீத், பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸால் காஸிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். சல்மான், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், சிப்லி பாறூக், ஆரிப் சம்சுதீன், ஆர்.எம். அன்வர், எம். லாஹீர், கே.எம். ஜவாத் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் மக்கள் பிரதிதிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு வெற்றிபெற உழைத்த அரச திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட முப்படையினர் மற்றும் சமூக நிறுவனங்கள் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் போன்ற அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட மக்களுடன் அந்நியோன்யமாக அளவளாவியதையும் அவர்களுக்கு உணவு பரிமாறியதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -