போதை ஒழிப்புக்கு பங்களிப்புச் செய்யும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது..!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும் எல்லா அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புகளை வழங்கும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் முன்னுரிமை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று குருநாகல் மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்ற “போதைப்பொருளில் இருந்து விடுதலைப் பெற்ற நாடு“ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

‘போதைப்பொருளில் இருந்து விடுதலைப் பெற்ற நாடு’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 5ஆவது கட்டம் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நிகழ்வு குருநாகலை மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேக்கர, எஸ்.பி.நாவின்ன, இராஜாங்க அமைச்சர் ரி.பீ.ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பணிப்பாளர் சாந்த பண்டார ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -