அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெறும் பழமொழி அல்ல. நல்ல ஆரோக்கியமான உணவுகளும் கூட அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால், அதை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அந்த சிறுநீரகத்தின் செயற்திறனையே பாதித்துவிடும்.
ஆண்மை குறைபாட்டிற்கு தீர்வளிக்கும் கிராமத்து மருத்துவ வழிமுறைகள்!
இது போல தான் எல்லா உணவுகளும், நாம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என தினமும் அதிகமாக உட்கொள்வோம். ஆனால், விளைவோ எதிர்மறையாக இருக்கும். எனவே, எந்தெந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது என அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்..
தண்ணீர்
தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. நீர்வறட்சி உடல் பாகங்களில் செயற்திறன் குறைபாடு ஏற்பட காரணமாகிறது. முக்கியமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டை இது குறைக்கிறது.
கற்றாழை
கற்றாழை ஜீஸ் பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்பார்கள். உண்மை தான் செரிமானம், உடல் எடை குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க இது ஊக்குவிக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் தசை பிடிப்புகள், கால்சியம் குறைபாடு போன்றவை உண்டாகும் அபாயமும் இருக்கிறது.
பால்
பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் நமது எலும்புகளின் வலிமையை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் இது அதிகமாக பால் உணவுகள் எடுத்துக் கொள்வது, உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைய காரணமாகிவிடுகிறது. மேலும், இது இரத்தசோகை ஏற்படவும் காரணியாக அமைகிறது.
நட்ஸ்
நட்ஸ் அளவாக சாப்பிடுவது உடற்திறனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக நட்ஸ் உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைகிறது. ஏனெனில், இவற்றால் கலோரிகள் அதிகம். Show Thumbnail
ஓட்ஸ் மீல்ஸ்
நார்சத்து மிகுதியாக உள்ள ஓட்ஸ் செரிமானத்தை ஊக்குவித்து, உடல் எடை குறைக்கவும் சீராக பயனளிக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஓட்ஸ் உண்பதால், குமட்டல், வாயுப் பிரச்சனைகள் உண்டாக காரணியாகிவிடுகிறது.