சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் நிசாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்து..!

ப்பற்துறைமுக அபிவிருத்தி அமைச்சரான அர்ஜுண ரணதுங்கவின் சகோதரரும், சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளருமான நிசாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அநுராதபுரம்-திருகோணமலை பிரதான வீதியில் ரத்மலே பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த விபத்தின் போது நிசாந்த ரணதுங்கவுடன் அவரது மனைவியும், அவரது குழந்தைகளும் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வேறு ஒரு வாகனம் மூலம் நிசாந்த உள்ளிட்டவர்கள் கொழும்புக்கு திரும்பி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -