ஏரியா 51 குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை அறிந்திருப்பீர்கள். ஆனால் ஏரியா 51 பகுதியில் இருந்து 12 மைல் தொலைவில் அமைந்திருக்கும் மற்றொரு இடத்தில் ஏரியா 51’ஐ விட அதிபயங்கரமான பகுதி ஒன்று அமைந்திருப்பது உங்களுக்கு தெரியுமா.?
கூகுள் மேப்ஸ் புகைப்படங்கள் ஆன்லைனில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, இவை அரசாங்கத்தின் மூலம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியானது நெவேடா தேசிய பாதுகாப்பு மையத்தில் அமைந்திருக்கின்றது. முன்னதாக இப்பகுதியானது நெவேடா ப்ரூவிங் கிரவுன்டு என அழைக்கப்பட்டது. 1940 மற்றும் 1950களில் பல்வேறு ரகசிய அணு வெடிப்பு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தற்சமயம் இப்பகுதியானது தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது (NNSA).ஏரியா 6 என அழைக்கப்படும் இப்பகுதியானது பாதுகாப்பு மற்றும் ஹோம்லேண்டு செக்யூரிட்டி துறைகள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகத்தின் டார்வின் மார்கன் கூறும் போது “இப்பகுதியில் எங்களது சொந்த சென்சார்களை சோதனை செய்வோம்.
மேலும் இங்கு சென்சார்கள் சார்ந்த பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இவை சேமிக்கப்படும் தகவல்களை நொடிகளில் ஆய்வு செய்ய வசதியாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.