ஹசன் அலியின் அதிகாரம் குறைக்கப்பட்டமை கட்சி நலனுக்காகவே - பிரதி அமைச்சர் ஹரீஸ்

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
ட்சிச் செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டமை தலைவர் ஹக்கீமின் நலனுக்காக அல்ல, மாறாக கட்சி நலனுக்காகவே அன்றி இது திட்டமிட்டு கட்சிச் செயலாளர் ஹசன் அலிக்கு செய்யப்பட்ட அநீதியல்ல. அவர் கட்சியை விட்டு தூரப்படுகின்றபோது அவர் எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி மத்திய குழு கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில்; ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கட்சியின் செயற்பாட்டை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டது. அதற்காக கட்சியின் உயர்பீடம் கூடி செயலாளர் பதவிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். கட்சி செயலாளராக இருப்பவரை அரசியல் பதவிகளில் அமர்த்தக்கூடாது. அவர் கட்சி பணிகளில் தன்னை முழு நேரம் ஈடுபடுத்த வேண்டும். கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையை கட்சித் தலைமைக்கு வழங்கியது.

இதன் நிமித்தம் கட்சிச் செயலாளர் ஹசன் அலி இருக்கத்தக்கதாக கட்சி செயலாளர் பதவிகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என கட்சியின் உயர்பீடம் தீர்மானித்து அதனை பேராளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தீர்மானம் செயலாளர் ஹசன் அலிக்கு அநீதியிழைக்கும் செயலாக இருந்திருந்தால் அந்நேரமே ஹசன் அலி இதற்கு எதிராக பேசியிருக்க வேண்டும். அவ்வாறு அன்று அவர் செய்யாமல் இன்று கட்சித் தலைமைக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்துவிட்டு இன்று அவர் குறைக்கப்பட்ட அதிகாரங்களை மீளத் தரவேண்டும் என ஊடகங்கள் வாயிலாக அறிக்கைகள் விடுகின்றார்.

கட்சியின் உள்விபகாரங்களை நாம் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இதற்காக கட்சி தலைமை தயாராக உள்ளது. ஆனால் செயலாளர் ஹசன் அலி சிலரின் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றார். இதனால் கட்சிக்கு பல சதிகள் திரைமறைவில் இடம்பெறுகின்றது. இதிலிருந்து ஹசன் அலி மீண்டு வரவேண்டும். அவர் கட்சியை விட்டு தூரப்படுகின்றபோது அவர் எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -