அபு அலா –
ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினைப்பெற்ற அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டாக்டர் கே.எல்.எம்.நக்பருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று (02) அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் நடாத்தப்பட்டது.
கடந்த 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவின்போது முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் என்ற முதுமானிப் பட்டம் இவருக்கு வழங்கிப்பட்டது.
மேற்படி பட்டத்தினை அன்றையதினம் பெற்ற 10 பேரில், இவர் மட்டுமே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.