அமெரிக்காவினால் வழங்கப்படும் கிரீன் கார்ட் எனப்படும் குடியுரிமை அந்தஸ்த்தை போன்ற ஒரு திட்டத்தை சவுதி அரேபியா முன்னெடுக்க தீவிரமாக அலோசனை செய்துவருவதாக அந்த நாட்டின் முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் முஹம்மத் குறிப்பிட்டுள்ளார்.
புலூம்பேர்க் ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியா வரி அறவிடுவதை இலக்காக கொண்டே இந்த திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள இளவரசர். சவுதி அரேபியாவின் வருமானத்தில் வரி அறவீட்டு ஆதாயம் மிக மிக குறைவு என்பதை சுட்டிக்கட்டியுள்ளார்.
குறித்த கிரீன் கார்ட் முறையில் எந்த அளவு உரிமைகள் வழங்கப்படும் என்பது தொடர்பில் அவர் தெரிவிக்கவில்லை.