இராணுவத்தின் பாதுகாப்பு தனக்குக் குறைக்கப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 100 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 50 இராணுவத்தினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும், எதிர்வரும் வாரங்களில் மீதமுள்ள 50 பேரும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பாதுகாப்பை நீக்கி பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது பாதுகாப்பு குறித்து அரசு மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருகின்றமை வருத்தமளிகின்றது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இவ்வாறு திடீரென தமது பாதுகாப்பு விடயங்களில் தீர்மானம் எடுத்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.