அளுத்கம மற்றும் பேருவளையில் சிங்கள இனவாத பிக்குகளும் காடையர்களும் முஸ்லிம்களை தாக்கி முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் சூரையாடியிருந்தனர்.
இத்தாக்குதலில் பல கோடி சொத்து இழப்புக்களும் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.
முஸ்லிம் சகோதரிகள் சொல்லொண்ணாத் துன்பங்களை இச்சம்பவத்தில் அனுபவித்தார்கள்.
பள்ளிவாசல்களையும் குர்ஆனையும் தீவைத்து எரிக்க பௌத்த காடையர்கள் நுழைந்த போது அவர்களுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் போராடியதாக பல கதைகளை நாம் சமுக வலைத் தளங்களில் வாசித்திருந்தோம்
அவ்வாறு போராடி தனது காலை இழந்த சகோதரர்களில் ஒருவர் தான் உங்கள் முன் நிற்கின்றார்.
இத்தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்களை அண்மித்த நிலையில் தற்போது இச்சகோதரனின் கால் ஓரளவு சுகமடைந்துள்ளது.
இவர் மோட்டார் வாகனத்தை மெதுவாக செலுத்தும்மளவுக்கு உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளார்.
அல்லாஹ்வுடைய கலாமை எரிக்க ஆயுதங்ளுடன் வந்த இனவாதிகளுக்கு எதிராக எவ்வித ஆயுதங்களுமின்றி இறையச்சம் என்ற ஒரே ஆயுதத்துடன் போராடிய இச் சகோதரனுக்கு முஸ்லிம் சமுகம் என்ன கைமாறு செய்தாலும் அது ஈடாகாது.
ஆனால் இச்சகோதரனுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எமது ஐவேளைத் துஆக்களில் இச்சகோதரனுக்கும், அத்தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டுள்ள ஏனையவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் அவர்களது சந்தோசமான எதிர்காலத்திற்காகவும் பிரார்த்திப்போம்.